த.வெ.க ஓர் திராவிட இயக்கம்தான்.. தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்கிறோம்.. துரை வைகோ!

Durai Vaiko: தமிழக வெற்றிக் கழகம் ஓர் திராவிட இயக்கம்தான் எனக் கூறிய துரை வைகோ, தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Published on: June 1, 2026 at 9:44 am

புதுக்கோட்டை, ஜுன் 1, 2026: திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தற்போதைய ஆட்சியைப் பற்றி கருத்து தெரிவித்தார்.

அவர், “எந்த புதிய ஆட்சியும் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் பெற வேண்டும். குற்றங்களை 100% தவிர்க்க முடியாது. ஆனால் குற்றம் செய்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரே வாரத்தில் அனைத்தையும் மாற்றிட முடியாது. சினிமாவில் சாத்தியமாகலாம், ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை” எனக் கூறினார்.

தவெகவுக்கு ஆதரவளித்த கட்சிகள் குறித்து அவர், “கடந்த தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. உடனடியாக மறுதேர்தல் நடத்த முடியாது. ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வராமல் தடுக்கவே இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ் ஆகியவை தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன” என விளக்கமளித்தார்.

மேலும், “திமுக கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் நின்றோம். தற்போதும் திமுக கூட்டணியில் தொடர்கிறோம். தற்போதைய கூட்டணி ஆட்சியை நான் நன்மையாக பார்க்கிறேன்” என தெரிவித்தார்.

மேகதாது அணை குறித்து அவர், “கர்நாடகா அரசு செய்வது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது. மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நீர் வராது. வரைவு திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே மேகதாது அணை கட்டக்கூடாது என்பதே எங்கள் நிலை” எனக் கூறினார்.

தொடர்ந்து அவர், “சாதி, மதம், பணம் ஆகியவற்றை கடந்து தவெக வெற்றி பெற்றுள்ளது. இது புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. எளியோர்களும் சட்டமன்ற உறுப்பினராக முடியும் என்ற நிலையை தவெக அரசு ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து கட்சிகளுக்கும் சமநிலையை ஏற்படுத்தியுள்ளது” என பாராட்டினார்.

இறுதியாக, “தவெகவை ஒரு திராவிட இயக்கமாகவே பார்க்கிறேன். பெரியார், அண்ணா கொள்கைகளை பேசுகிறார்கள். சமூகநீதியை கொள்கையாகக் கொண்டுள்ளனர். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக மற்றொரு திராவிட இயக்கம் வந்துள்ளது” என துரை வைகோ தெரிவித்தார்.

இதையும் படிங்க : அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com