Thirumurugan Gandhi: “மதத்துக்கும், நிலத்துக்கும் அப்பாற்பட்டவர் திருவள்ளூவர்” என மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
Thirumurugan Gandhi: “மதத்துக்கும், நிலத்துக்கும் அப்பாற்பட்டவர் திருவள்ளூவர்” என மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

Published on: June 1, 2026 at 9:39 am
சென்னை, ஜுன் 1, 2026: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவரின் புகைப்படம் காவி நிறத்தில் வைக்கப்பட்டதை கண்டித்து, இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, “தமிழ்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடமா?”, “வந்தே மாதரத்தை திணிக்காதே”, “திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசாதே” என பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். தமிழர் அடையாளம் மற்றும் திருக்குறளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
திருமுருகன் காந்தி பேச்சு
இந்நிலையில், திருமுருகன் காந்தி, “தமிழ்நாட்டின் ஆளுநர்கள் தமிழர் அடையாளத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். திருவள்ளுவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர், உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர். அவருக்கு காவிச் சாயம் பூசுவது தமிழர் விரோத செயல்” எனக் கூறினார்.
அவர் மேலும், “வந்தே மாதரம் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழ்தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்தி மூன்றாம் இடத்தில் வைக்கக் கூடாது. இது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது” எனக் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், திருவள்ளூவர் நிலம் மற்றும் மதத்துக்கு அப்பாற்பட்டவர் எனவும் தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு கோரிக்கை
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அரசு தீவிரமாக செயல்பட்டு, வலிமையான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். “முதல்வர் வாய் திறந்து தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, “தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தமிழ் உணர்வாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என திருமுருகன் காந்தி எச்சரித்தார்.
இதையும் படிங்க : அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com