Youth Dies in Villagers’ Assault : மதுபோதையில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
Youth Dies in Villagers’ Assault : மதுபோதையில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

Published on: May 30, 2026 at 7:26 pm
திருவள்ளூர், மே 30, 2026: திருவள்ளூர் மாவட்டம் ராமராஜகண்டிகை பகுதியில், பெண்களிடம் மது போதையில் தகராறு செய்ததாக அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பிரசென்ஜித் தாஸ் ஊர்மக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களிடம் தண்ணீர் கேட்டபோது மறுக்கப்பட்டதால், மதுபோதையில் இருந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கத்தியால் ஜன்னலை உடைக்க முயன்றதால், அந்த பெண் உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் சேர்ந்து பிரசென்ஜித் தாஸை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், அவர் அசாமில் இருந்து வேலைக்காக வந்தவர் என்றும், திருவள்ளூரில் வாடகை அறையில் தங்கி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : செங்கல் சூளை மேஸ்திரியை சுற்றி வளைத்த 6 பேர்… திருவாரூரில் நடந்த கொடூரத்தின் பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com