Horse Trading Politics : ‘ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது“ என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
Horse Trading Politics : ‘ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது“ என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

Published on: May 25, 2026 at 11:38 pm
சென்னை, மே 25, 2026: தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கிய நிலையில் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், த.வெ.க.வுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற எஸ். காமராஜ் ஆதரவு வழங்கினார்.
அப்போது த.வெ.க. குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
அவர்கள் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், “ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சந்தர்ப்பவாத அரசியல்.. மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதீர்.. கண்டித்த அன்புமணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com