மேகதாது அணையை கட்ட விட மாட்டோம்.. அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்

Mekedatu Dam Row: மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என தமிழக அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Published on: May 25, 2026 at 11:12 pm

சென்னை, மே 25, 2026: மேகதாது அணை கட்ட விடமாட்டோம்; முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் தெளிவான செய்தியை அளித்துள்ளார் என தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார். இது குறித்து ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “முதலமைச்சர் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார். மேகதாது அணை கட்டுமானத்தை எவ்விதத்திலும் அனுமதிக்கமாட்டோம்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், காவிரி நீர்வழி உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டரீதியான போராட்டம் தொடரப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இதனை உறுதிப்படுத்தி, “மேகதாது அணை கட்டுமானம் நடைபெறாது” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு, பெங்களூரு குடிநீர் தேவைகள் மற்றும் மின்சாரம் உற்பத்தி காரணமாக மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ளது. முன்னதாக, உச்சநீதிமன்றம் 2025 நவம்பர் 11 அன்று, மேகதாது திட்டம் தொடர்பான வழக்குகளை மத்திய நீர்வள ஆணையம் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியது. மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த மறுபரிசீலனை மனு 2025 டிசம்பர் 11 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : குதிரைப் பேரம் பற்றி தி.மு.க, அ.தி.மு.க. பேசலாமா? செங்கோட்டையன் கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com