விளாத்திக்குளம் மாணவி வன்கொடுமை.. குற்றவாளிக்கு இரட்டை தூக்கு.. அன்புமணி வரவேற்பு

Vilathikulam Student Case: விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை – படுகொலை வழக்கில், குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: May 25, 2026 at 5:27 pm

சென்னை, மே 25, 2026: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10-ஆம் தேதி கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “மாணவிக்கு கொடூரம் இழைக்கப்பட்ட 76-ஆம் நாளில் குற்றவாளிக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த வழக்கை விசாரித்து விரைவாக தீர்ப்பளித்த நீதிபதியும், சரியான வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர்களும், புலனாய்வு செய்த காவல்துறையினரும் பாராட்டுக்கு உரியவர்கள். இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்வதை அரசும், காவல்துறையும் சாத்தியமாக்க வேண்டும்,.

பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்த அளவுக்கு விரைவாகவும், கடுமையாகவும் தண்டனை வழங்கப்பட்டால் தான் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் தடுக்கப்படும்.

இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனாலும், விளாத்தி்க்குளம் மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தைப் பார்க்கும் போது இத்தகைய அரிதிலும் அரிதான வழக்குகளில் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதை பா.ம.க. ஆதரிக்கிறது.

விளாத்திக்குளம் மாணவி படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு வழங்கப்பட்டிருப்பது நடந்த பாவச் செயலுக்கான பரிகாரம் மட்டும் தான். மற்றபடி திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எந்த அளவுக்கு தலைவிரித்தாடின என்பதற்கான மோசமான எடுத்துக்காட்டாக விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கு வரலாற்றில் பதிவாகியிருக்கும்.

பெண்களும், குழந்தைகளும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பம் ஆகும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கச்சா விலை குறைந்த போது பெட்ரோல் விலை குறைந்ததா? ராமதாஸ் கேள்வி

கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே.. மேகதாது விவகாரம் குறித்து டி.டி.வி தினகரன்!
Cauvery Water Dispute

கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே.. மேகதாது விவகாரம் குறித்து டி.டி.வி தினகரன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com