நான் ஜிகாதியா? என் வாழ்க்கையை போச்சு.. திரிஷ்யம் பட நடிகை ஆதங்கம்!

AMMA Controversy : திரிஷ்யம் பட நடிகை அன்சிபா ஹாசன், திரைத்துறையில் தான் சந்தித்த சில மோசமான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Published on: May 25, 2026 at 12:48 pm

திருவனந்தபுரம், மே 25, 2026: திரிஷ்யம் படத்தின் நடிகை அன்சிபா ஹாசன், நடிகர் டைனி டாம் மற்றும் அம்மா (மலையாள சினிமா நடிகர்கள் சங்கம்) அமைப்பின் சில உறுப்பினர்கள் தன்னை ‘ஜிஹாதி’ என குற்றம் சாட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகளை பரப்பி, குணநலனைக் கெடுத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் அவர் அம்மா சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை அன்சிபா ஹாசன், டைனி டாம் தன்னை ‘ஜிஹாதி’ என அழைத்தார் என்று மற்றொரு உறுப்பினர் தெரிவித்ததாக கூறினார். மேலும், தன்னை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகவும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, “என் முஸ்லிம் அடையாளம் காரணமாகவே குறிவைக்கப்பட்டிருக்கிறேனா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அன்சிபா ராஜினாமா

முன்னதாக, அன்சிபா பிப்ரவரி 21 அன்று அம்மா சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது, அதிகாரப்பூர்வமாக “தனிப்பட்ட காரணங்கள் மற்றும் வேலை அழுத்தம்” எனக் குறிப்பிட்டாலும், அமைப்பின் செயலாளரிடம் உண்மையான காரணங்களை தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இதற்கிடையில், அம்மா தொழிற்சங்கத் தலைவர் ஸ்வேதா மேனன், “அவர் ராஜினாமா கடிதத்தில் எந்த குற்றச்சாட்டையும் குறிப்பிடவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க : ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்ட ஐஸ்வர்யா ராய்.. சிரித்து ரசித்த மகள் ஆராத்யா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com