Kara Hits Netflix on May 28 : தனுஷின் திரைப்படம் ஓ.டி.டி.-யில் வெளியாகவுள்ளது. எந்தத் தளத்தில் பார்க்கலாம் தெரியுமா?
Kara Hits Netflix on May 28 : தனுஷின் திரைப்படம் ஓ.டி.டி.-யில் வெளியாகவுள்ளது. எந்தத் தளத்தில் பார்க்கலாம் தெரியுமா?

Published on: May 24, 2026 at 11:06 am
சென்னை, மே 24, 2026: நடிகர் தனுஷின் கர திரைப்படம் ஒ.டி.டி.-யில் வெளியாகிறது. இத்திரைப்படத்தை, மே 28ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் பார்க்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர திரைப்படம் மே 28, 2026 அன்று OTT-யில் வெளியாகிறது. இதன்மூலம், ரசிகர்கள், தங்கள் வீட்டிலிருந்தே படத்தை பார்க்கும் வாய்ப்பு பெறுகின்றனர். இப்படத்தை பொறுத்தமட்டில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். படத்தில், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூட்டு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
படத்தின் கதைக்களம்..
இப்படத்தின் கதைக்களம், 1990களின் ராமநாதபுரம் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதைக்களம் கொண்டது. அதாவது, கர படம் போர் தோழில் உருவாக்கப்பட்ட கதையை மையமாகக் கொண்டுள்ளது.
சமூக, அரசியல், வரலாற்று அம்சங்களை இணைத்து, படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் படம் தியேட்டரில் 2026 ஏப்ரல் 30ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : யோகி பாபுவின் தசாவதாரம்.. 10 வித கெட்அப்.. தீயாய் பரவும் போஸ்டர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com