ஓடும் லாரிக்குள் சிறுமி பாலியல் வன்கொடுமை.. தம்பதி, கிளீனர் அதிரடி கைது!

POCSO Case in Vandavasi : ஓடும் லாரிக்குள் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தம்பதியும், கிளீனரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: May 23, 2026 at 8:45 pm

Updated on: May 23, 2026 at 8:46 pm

சென்னை, மே 23, 2026: வந்தவாசி தர்காவில் தாயுடன் வசித்து வந்த 14 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதி மற்றும் லாரி கிளீனரை கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரியில், ஆற்காட்டைச் சேர்ந்த பாத்திமா (25), அவரது கணவர் இம்ரான் பாஷா (28) மற்றும் லாரி கிளீனர் அஜ்மல் பாஷா (27) ஆகியோர் தாயுடன் வசித்து வந்த 14 வயது சிறுமியுடன் நட்பு பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூரு செல்லும் வழியில், ஓடும் லாரிக்குள் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியுள்ளனர்.இந்தப் வன்கொடுமைக்குப் பிறகு, சிறுமி தப்பிச் சென்றார்.

பொதுமக்கள் அவரை மீட்டு, பெங்களூருவில் உள்ள மகளிர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்தன.

போக்சோ வழக்கு பதிவு

இந்நிலையில், பெங்களூரு மற்றும் வந்தவாசி காவல்துறையின் ஒத்துழைப்புடன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பாத்திமா, இம்ரான் பாஷா மற்றும் அஜ்மல் பாஷா ஆகியோர் ஆற்காட்டில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க : மனைவி உடலில் வேறோரு ஆணின் படம் டாட்டூ.. ஆட்டோ டிரைவர் கைது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com