Ebola Virus: எபோலா வைரஸ் பரவல் உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Ebola Virus: எபோலா வைரஸ் பரவல் உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக டெல்லி விமான நிலையத்தில் தீவிர சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Published on: May 21, 2026 at 4:18 pm
புதுடெல்லி, மே 21 2026: எபோலா வைரஸ் பரவல் உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் எதிரொலியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட எபோலா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது அந்த நாடுகள் வழியாகவோ பயணம் செய்பவர்கள் விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எபோலா பாதிப்பு
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோருக்கு சந்தேகத்திற்குரிய தொற்று இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு அண்டை நாடுகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதால் உலக சுகாதார அமைப்பு அவசரநிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, இந்திய சுகாதாரத்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளின் பயண வரலாறு ஆய்வு செய்யப்படுவதுடன், காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, வாந்தி, பேதி, தொண்டை வலி, பலவீனம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
இந்தியாவில் பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், எந்தவித அபாயத்தையும் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, எபோலா உலகிலேயே மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்று என்றும், இது உடலின் உள் உறுப்புகளில் ரத்தக்கசிவு, உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
மேலும், இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவாது. ஆனால், பாதிக்கப்பட்ட நபர்களின் ரத்தம், உடல் திரவங்கள் அல்லது நேரடி தொடர்பு மூலம் வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது என்பதால், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க : டெல்லியில் வெப்ப அலை.. ஆரஞ்சு எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com