Dhoni’s Words Inspire Brevis: சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் வீரருக்கு மகேந்திர சிங் தோனி கொடுத்த சூப்பர் அட்வைஸ் என்ன தெரியுமா?
Dhoni’s Words Inspire Brevis: சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் வீரருக்கு மகேந்திர சிங் தோனி கொடுத்த சூப்பர் அட்வைஸ் என்ன தெரியுமா?

Published on: May 21, 2026 at 10:34 am
சென்னை, மே 21, 2026: தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் டெவால்ட் பிரேவிஸ், தனது ஐ.பி.எல் பயணத்தில் மகேந்திர சிங் தோனி வழங்கிய ஆலோசனையை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். பிரேவிஸிடம், “தன்னம்பிக்கை மற்றும் அதீத தன்னம்பிக்கை ஆகிய இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு; எப்போதும் தன்னம்பிக்கையின் பக்கம் நிற்க வேண்டும்” என மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
தோனியின் ஆலோசனை
ஐ.பி.எல் கிரிக்கெட்டின் முதல் ஆண்டிலேயே மகேந்திர சிங் தோனி, பிரேவிஸிடம் “தன்னம்பிக்கையை காப்பாற்று, அதீத தன்னம்பிக்கைக்கு இடம் கொடுக்காதே” என்று அறிவுரை கூறியுள்ளார். இந்த எளிய ஆனால் ஆழமான ஆலோசனை, பிரேவிஸின் விளையாட்டு மனநிலையை சிறப்பாக வடிவமைத்ததுள்ளது.
இது குறித்து பிரேவிஸ், “அந்த ஒரு ஆலோசனை தான் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டுதலாக உள்ளது” என்றார். பிரேவிஸ், ஐ.பி.எல் 2025-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குர்ஜப்நீத் சிங் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் மாற்று வீரராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2022-ல் டெஸ்ட் கேப்டன்ஷியை துறந்தது ஏன்? மௌனம் கலைத்த விராத் கோலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com