பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பு.. டாஸ்மாக் ஊழியர்கள் வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு!

Mayiladuthurai TASMAC Issue : டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Published on: May 19, 2026 at 7:42 pm

மயிலாடுதுறை, மே 19, 2026: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் மேற்பார்வையாளர் காமராஜ் மற்றும் விற்பனையாளர் பாபு மீது சீர்காழி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென கடை அடைப்பு செய்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் உள்ள 43 அரசு டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாமல் இருந்தன.

பாட்டிலுக்கு பத்து ரூபா…

முன்னதாக விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது “பாட்டிலுக்கு பத்து ரூபாய்” என பாடியிருந்த நிலையில், தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூல் நடைபெறுவதாக வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று (மே 19, 2026) நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். வழக்குப்பதிவை ரத்து செய்யவும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : தாம்பரம் கானா பாடகர்கள் இரட்டைக் கொலை… இரு இளஞ்சிறார்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது

இ.பி.எஃப் உறுப்பினர்கள் இ.பி.எஸ் திட்டத்தில் இணைய வாய்ப்பு; புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள் யார்? New EPS Scheme

இ.பி.எஃப் உறுப்பினர்கள் இ.பி.எஸ் திட்டத்தில் இணைய வாய்ப்பு; புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com