தாம்பரம் கானா பாடகர்கள் இரட்டைக் கொலை… இரு இளஞ்சிறார்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது

Tambaram Gaana Singers Murder : தாம்பரம் அருகே பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: May 19, 2026 at 7:00 pm

சென்னை, மே 19, 2026: தாம்பரம் அருகே பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பரத் (25), சீனு (24) ஆகியோர் கானா பாடல்கள் பாடும் தொழிலில் இருந்தனர்.

இவர்கள் மே 16 அன்று படப்பை அருகே இசைக் கச்சேரியில் பாடிய பின், நண்பர் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், மறுநாள் காலை 11 மணியளவில், 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

போலீஸ் விசாரணை

இது தொடர்பாக, மணிமங்கலம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இதற்கிடையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பழிக்கு பழி

3 வருடங்களுக்கு முன்பு திமுக ஊராட்சி மன்றத் தலைவர் குமுதா டோமினிக்கின் மகன் ஆல்பர்ட் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளியான ஆறுமுகத்தை, பரத்-தீபக் குழுவினர் 3 மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் கொலை செய்தனர்.

பரத் தீபக்கின் நெருங்கிய நண்பர் என்பதால், ஆறுமுகத்தின் நண்பர்கள் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

7 பேர் கைது

இந்தக் கொலை வழக்கு விசாரணையில், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மணி (26), படப்பைச் சேர்ந்த சந்தோஷ் (23), முடிச்சூரைச் சேர்ந்த குமரவேல் (20), பெருங்களத்துரைச் சேர்ந்த வேலன் (19), பீர்க்கங்கரணையைச் சேர்ந்த அன்பு (20) உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 சிறுவர்களும் உள்ளனர். அனைவரும் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கப்படுகின்றனர். மேலும், கொலை பழிக்கு பழியா? அல்லது வேறு காரணமா? என்பதை போலீசார் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : நெல்லை காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. இளஞ்சிறார்கள் துணிகரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com