Nellai outpost petrol bomb attack : நெல்லையில் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nellai outpost petrol bomb attack : நெல்லையில் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 19, 2026 at 6:03 pm
திருநெல்வேலி, மே 19, 2026: திருநெல்வேலியில் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்- பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
திருநெல்வேலி மாவட்டம் மானூர் போலீசார், ராமையன்பட்டி புறக்காவல் நிலையம் அருகே வாகன சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது, 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை வீசி தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் உடனடியாக தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ராமையன்பட்டி மற்றும் கண்டியபேரி பகுதிகளைச் சேர்ந்த 17 வயதான 3 சிறுவர்கள் எனத் தெரியவந்தது. இன்று காலை அந்த 3 சிறுவர்களும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர் மானூர் போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
குண்டுவீச்சு ஏன்?- பரபரப்பு தகவல்கள்
நேற்று பகலில், மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் இல்லாததால் போலீசார் சாவியை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், மதுபோதையில் பெட்ரோல் குண்டை வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க : புதுக்கோட்டையில் பெண் பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com