IIT Madras AI Showcase :சென்னை ஐஐடி வத்வானி மையத்தில் ஏஐ ஆராய்ச்சி போஸ்டர் கண்காட்சி நடந்தது.
IIT Madras AI Showcase :சென்னை ஐஐடி வத்வானி மையத்தில் ஏஐ ஆராய்ச்சி போஸ்டர் கண்காட்சி நடந்தது.

Published on: May 19, 2026 at 5:58 pm
சென்னை, மே 19, 2026: சென்னை ஐஐடி ‘வத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி’ (டபிள்யூ.எஸ்.ஏ.ஐ) சார்பில், கடந்த ஓராண்டில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட 100 ஆராய்ச்சிகள் குறித்து போஸ்டர் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்தக் கண்காட்சியில் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், உருவாக்க ஏஐ, பெரிய மொழி மாதிரிகள், கணினிப் பார்வை, கணக்கீட்டு உயிரியல், மற்றும் பொறுப்புமிக்க ஏஐ போன்ற துறைகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் போஸ்டர் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், வத்வானி பிரிவின் தலைவர் பேராசிரியர் பாலராமன் ரவீந்திரன் கூறுகையில், “ஐஐடி சென்னை கடந்த ஓராண்டாக ஏஐ தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றின் கருத்துருக்கள் போஸ்டராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் பார்வையாளர்களுக்கு ஆராய்ச்சியின் விபரங்களை விளக்கினர்” என்றார்.
இந்தக் கண்காட்சி, மாணவர்களுக்கு ஆராய்ச்சியை நேரடியாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பை வழங்கியது. கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஏஐ பயன்பாட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இது ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இதையும் படிங்க : பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்வீர்களா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com