M K Stalin says DMK Still Governs Tamil Nadu : தி.மு.க. தோல்வியுற்றாலும், நாம்தான் நாட்டை ஆள்கிறோம் என திருமண விழாவில் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
M K Stalin says DMK Still Governs Tamil Nadu : தி.மு.க. தோல்வியுற்றாலும், நாம்தான் நாட்டை ஆள்கிறோம் என திருமண விழாவில் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.

Published on: May 18, 2026 at 7:29 pm
Updated on: May 18, 2026 at 7:30 pm
தஞ்சாவூர், மே 18, 2026 : தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “திமுக தோல்வியுற்றாலும், நாம்தான் தமிழ்நாட்டை ஆளுகிறோம்” என வலியுறுத்தினார். தேர்தல் தோல்வி குறித்து சோகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், திமுக பல தேர்தல்களில் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்தித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஃபீனிக்ஸ் பறவையை போல்..
தொடர்ந்து பேசிய மு.க ஸ்டாலின், தோல்வி நேரங்களில் திமுக மீண்டும் எழுந்து நிற்கும் தன்மையை ஃபீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிட்டார். இது குறித்து பேசிய அவர், “தோல்வி எங்களை சிதைக்காது, மாறாக வலிமையூட்டும்” என அவர் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்டங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன என்பதால், அதுவே திமுக ஆட்சியின் தொடர்ச்சி என அவர் வலியுறுத்தினார்.
தோல்விக்கு என்ன காரணம்?
இதற்கிடையில், திமுக தோல்விக்கான காரணங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். “உடன் பிறப்பே வா” என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில் அனைவரும் தங்கள் கருத்துக்களை பகிரலாம் என அவர் கூறினார். மக்களின் எதிர்பார்ப்பு, கட்சியின் குறைகள் ஆகியவை ஆராயப்பட்டு, எதிர்காலத்தில் சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
த.வெ.க மீது விமர்சனம்
இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த விதம் குறித்து ஸ்டாலின் விமர்சித்தார். “வாக்காளர்களைச் சந்திக்காமல், பூத் ஏஜெண்ட், கவுண்டிங் ஏஜெண்ட் இல்லாமல், சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்துள்ளனர்” என அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக, இளைஞர்களை பரப்புரை செய்ய வைத்து ஆட்சியைப் பிடித்ததாகவும் அவர் கூறினார்.
நாம்தான் ஆள்கிறோம்
இதைத்தொடர்ந்து, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திராவிட மாடல் நலத்திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரப்படுகின்றன என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். “நம்முடைய திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வரை, நாம்தான் தமிழ்நாட்டை ஆளுகிறோம்” என அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, “தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாகக் கருதி, திமுக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது” என ஸ்டாலின் தெரிவித்தார். அவரது உரை, திமுக ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க : அ.தி.மு.க.வுக்கு அமைச்சரவையில் இடமுண்டா? நிதியமைச்சர் செங்கோட்டையன் பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com