பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் போட்டி.. ராஜத் படிதார் ஏன் விளையாடவில்லை?

Patidar Injury Update : பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ராஜத் படிதார் விளையாடவில்லை.

Published on: May 18, 2026 at 10:40 am

தர்மசாலா, மே 18, 2026: கிரிக்கெட் வீரர் ராஜத் படிதார், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் கேப்டன் ஆவார். இவர், 2026 ஐ.பி.எல் போட்டியில் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.

காரணம், அவர் முந்தைய போட்டியில் (கே.கே.ஆர் எதிராக) கார்த்திக் தியாகி வீசிய பவுன்சர் பந்தால் ஹெல்மெட்டின் பின்புறம் தாக்கப்பட்டப்பட்டார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

என்ன நடந்தது?

மே 13, 2026 அன்று ராய்ப்பூரில் நடந்த ஆர்.சி.பி vs கே.கே.ஆர் ஆட்டத்தில், படிதார் பவுன்சர் பந்தால் ஹெல்மெட்டில் தாக்கப்பட்டார். இந்நிலையில், அவர் அப்போட்டியில் தொடர்ந்து விளையாடினாலும், பின்னர் மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை காரணமாக ஓய்வு அளிக்க பரிந்துரைத்தனர். இதனால், அவர் தரம்சாலா பயணத்தில் அணியுடன் சேரவில்லை. படிதாரின் இடத்தில் சுயாஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். ஜிதேஷ் சர்மா தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றார்.

படிதார், இதுவரை 10 இன்னிங்ஸ்களில் 326 ரன்கள் எடுத்துள்ளார். 195 ஸ்ட்ரைக் ரேட் உடன் மூன்று அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்.. வெள்ளி வென்ற இந்திய ஆடவர் ஜோடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com