Sengottaiyan : தமிழ்நாடு அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் உண்டா என்ற கேள்விக்கு நிதியமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
Sengottaiyan : தமிழ்நாடு அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் உண்டா என்ற கேள்விக்கு நிதியமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

Published on: May 17, 2026 at 9:10 pm
கோவை, மே 17, 2026: தமிழக அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் உண்டா என்ற கேள்விக்கு நிதித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர், “அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். எத்தனை இடங்கள், யாருக்கு இடம் என்பதனை முதல்வர் விஜய் தான் முடிவு செய்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து
மேலும் பேசிய செங்கோட்டையன், “ஜெயலலிதா முதலில் 7 பேரை அமைச்சர்களாக நியமித்தார்; பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்தார். அதேபோல், தற்போதைய ஆட்சியிலும் அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கப்படும்” என்றார்.
அ.தி.மு.க.வுக்கு இடம்?
தமிழக அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “அ.தி.மு.க.வுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதை நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என செங்கோட்டையன் சிரிப்புடன் பதிலளித்தார்.
இதன் மூலம், அ.தி.மு.க. பிரிவு அணிக்கு அமைச்சரவையில் இடம் உண்டா என்பது குறித்து தெளிவான பதில் அளிக்காமல், முடிவை முதல்வர் விஜயின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர் கட்சி ஆரம்பித்தால் திராவிட கட்சிதான்.. கமல்ஹாசன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com