Nagapattinam | நாகப்பட்டினத்தில் விபத்தில் சிக்கி நாகர்கோவிலை சேர்ந்த ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.
Nagapattinam | நாகப்பட்டினத்தில் விபத்தில் சிக்கி நாகர்கோவிலை சேர்ந்த ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on: September 19, 2024 at 1:15 pm
Nagapattinam | கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் கேத்ரீன் ஜினிதா. 42 வயதான இவர் நாகப்பட்டினம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சிக்கல் ஈசிஆர் சாலையில் நடந்த விபத்தில் புதன்கிழமை (செப்.18, 2024) உயிரிழந்தார்.
ஈ.சி.ஆர் சாலையில், கேத்ரீன் தனது மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது சொகுசு கார் வந்த வேத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சாமுவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமுவேல் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆவார். கேத்ரீன் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். விபத்தில் கணித ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கட்டுமஸ்தான உடல்வாகு; ஆணழகன் போட்டியில் வெற்றி: குமரி போலீசுக்கு எஸ்.பி பாராட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com