Food | குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மொறுமொறு பிரட் பக்கோடா செய்வது எப்படி என்பது தெரியுமா?
February 6, 2025
Food | குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மொறுமொறு பிரட் பக்கோடா செய்வது எப்படி என்பது தெரியுமா?
Published on: September 19, 2024 at 12:41 pm
Food | குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய பிரட்டை பயன்படுத்தி பத்தே நிமிஷத்தில் பட்டுனு செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபியை எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரட் – 5
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
குடைமிளகாய் – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரகம் -அரை டீஸ்பூன்
கடலை மாவு – 4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளை இரண்டு மூன்று துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயம் மற்றும் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதினை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தினை நீள வாக்கில் நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் குடைமிளகாய் சேர்க்க வேண்டும். குடைமிளகாய்க்கு பதிலாக கேரட்டும் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் மஞ்சள் தூள், சீரகம், கடலை மாவு, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கலந்து விட வேண்டும். பின்னர் இதனுடன் சிறிதளவு அதாவது கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வடை மாவு பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது பிரட் பக்கோடா செய்வதற்கான மாவு தயார் நிலையில் உள்ளது. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அடுப்பு தீயை மீடியம் ஃபிளேமில் வைத்து தயார் செய்து வைத்த மாவினை பக்கோடா போன்று எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். பக்கோடா பொன்னிறமாக மாறியதும் எண்ணெயிலிருந்து எடுத்து விட வேண்டும். இப்போது சுவையான பிரட் பக்கோடா தயார். இந்த பிரட் பக்கோடா உடன் டொமட்டோ கெட்சப் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : நாவூரும், ருசி அள்ளும்: 1 கிலோ மீனில் சுவையான குழம்பு செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com