ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

Pant Fined ₹12 Lakh : லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Published on: May 16, 2026 at 3:16 pm

லக்னோ, மே 16, 2026 : இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து வெற்றி பெற்றிருந்தாலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் மீது 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லக்னோவில் நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 187 ரன்கள் எடுத்தது. அதனை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 16.4 ஓவர்களில் கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆனால், போட்டி நடக்கும் போது லக்னோ அணி தேவையான ஓவர் வேகத்தை பின்பற்றவில்லை என்பதால், கேப்டன் பந்த் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐ.பி.எல் விதிகளின்படி, முதல் தவறுக்கு கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மீண்டும் தவறு நடந்தால், அபராதம் அதிகரிக்கப்படுவதோடு, கேப்டனுக்கு போட்டி தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், பந்த் மீது ஐ.பி.எல் அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.பி.எல் விதிகள்

ஐ.பி.எல் நிர்வாகம், ஒவ்வொரு போட்டியும் நேரத்திற்கு முடிவடைய வேண்டும் என்பதற்காக ஓவர் ரேட் விதிகளை கடுமையாக அமல்படுத்தி வருகிறது. இதற்கு முன், ஷ்ரேயஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், ஹார்திக் பாண்ட்யா போன்ற கேப்டன்களும் இதே குற்றத்திற்காக அபராதம் செலுத்தியுள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : ஒழுக்கம், உடல் தகுதி அவசியம்.. மகளிர் ஹாக்கி பயிற்சியாளர் மரிஜ்னே!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com