மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடி ஊழல்.. அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்

CTR Nirmalkumar : மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என சி.டி. நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Published on: May 15, 2026 at 7:46 pm

மதுரை, மே15, 2026: தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.400 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது” என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த ஊழல் குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இது குறித்து பேசிய அவர், “மதுரை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ₹400 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து, மக்களின் வரிப்பணம் திருடப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், இதுவரை விசாரணை நடைபெறாத நிலையில், புதிய அரசு முழுமையான விசாரணை நடத்தும் என உறுதி அளித்தார்.

இதற்கிடையில், “ஊழலற்ற நிர்வாகமே முதல்வர் விஜய்யின் இலக்கு” என்று அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், பெண்கள் பாதுகாப்பு திட்டம் ‘சிங்கப்பெண்’, டாஸ்மாக் கடைகள் மூடல் போன்ற நடவடிக்கைகள் அரசின் முன்னுரிமை எனக் கூறினார். இதற்கிடையில், பழைய அரசின் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடரும் என்றும், அதை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : இன்ஸ்டா மூலம் பள்ளி மாணவி மிரட்டல்.. 3 மாணவர்கள் கைது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com