Karuppu Advance Booking Buzz : சூர்யா – த்ரிஷா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படம் மே 14, 2026 அன்று வெளியாக உள்ளது.
Karuppu Advance Booking Buzz : சூர்யா – த்ரிஷா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படம் மே 14, 2026 அன்று வெளியாக உள்ளது.

Published on: May 13, 2026 at 3:03 pm
சென்னை, மே 13, 2026: சூர்யா – த்ரிஷா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படம் மே 14, 2026 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படம் ஏற்கனவே (யூ/ஏ) சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் முன்பதிவு மிக வலுவாக தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 36 மணி நேரத்தில் ரூ.1.9 கோடி முன்பதிவு வசூல் செய்துள்ளது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ரூ.2.34 கோடி முன்பதிவு மூலம் வசூலாகியுள்ளது.
ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு சி.பி.எஃப்.சி யூ.ஏ (13+) சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் கதை, கருப்பசாமியின் சக்தியால் வழக்கறிஞர் சரவணன் (சூர்யா) ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக போராடுவது எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் வழக்கறிஞர் ப்ரீதி கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்; பேபி கண்ணன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ளார். இந்தப் படத்தை பொறுத்தமட்டில், நீதி, அச்சம், சமூகப் போராட்டம், தெய்வீக சக்தி முக்கிய கருப்பொருளாக உள்ளது. படத்தில், சூர்யா, திரிஷா, ஆர்.ஜே பாலாஜி, யோகி பாபு, இன்றன்ஸ், ஸ்வசிகா, நட்டி சுப்ரமணியம் என பலர் நடித்துள்ளனர். படத்துக்கு, சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா- திரிஷா 20 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மீண்டும் புராணக் கதை.. பரபரக்கும் பாலிவுட்.. கடவுள் அவதாரம் எடுக்கும் ரன்வீர் சிங்? கதாபாத்திரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com