Uttar Pradesh | புல்டோசர் சட்டத்தின் அடையாளம் அல்ல என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Uttar Pradesh | புல்டோசர் சட்டத்தின் அடையாளம் அல்ல என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
Published on: September 18, 2024 at 5:36 pm
Uttar Pradesh | முன்னாள் உத்தர பிரதேச முதல்வரும் பிஎஸ்பி தலைவருமான மாயவதி, கட்டுமானங்களை அழிக்க “புல்டோசர்கள்“ பயன்படுத்தும்முறை அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இது சிறந்த ஆட்சிக்கான அடையாளம் அல்ல என்று தெரிவித்தார். மேலும், “அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவதி கேட்டுக்கொண்டார்.
உச்ச நீதிமன்றம் அக்டோபர் 1 வரை எந்தவொரு கட்டுமானங்களும் அழிப்பதற்கு அனுமதி வழங்காதென அறிவித்ததை தொடர்ந்து அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாயாவதி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “புல்டோசர்கள் மூலம் கட்டுமானங்களை அழிப்பது சட்டத்தின் அடையாளமல்ல. ஆனால் இது அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது” என்று மாயவதி கூறியுள்ளார்.
மேலும், “பொது மக்கள் புல்டோசர் அல்லது வேறு எந்த விஷயத்திற்கும் உடன்படாதபோது, மத்திய அரசு முன் வந்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். இல்லையெனில், புல்டோசர் நடவடிக்கை வழக்கில், பெருமதிப்பிற்குரிய மத்திய அரசு தலையிட்டு, மத்திய அரசின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில், மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 25 லட்சம் வாக்காளர்கள்- 24 தொகுதி: ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com