BSNL Recharge | நாளொன்றுக்கு ரூ.3க்கும் குறைவான திட்டத்தில் 300 நாள்கள் வரை வேலிடிட்டி கொண்ட பி.எஸ்.என்.எல் திட்டம் தெரியுமா?
BSNL Recharge | நாளொன்றுக்கு ரூ.3க்கும் குறைவான திட்டத்தில் 300 நாள்கள் வரை வேலிடிட்டி கொண்ட பி.எஸ்.என்.எல் திட்டம் தெரியுமா?
Published on: September 18, 2024 at 3:24 pm
Updated on: September 18, 2024 at 7:25 pm
BSNL Recharge | பிஎஸ்என்எல் ரூ.797 விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 300 நாட்கள் செல்லுபடியாகும். இலவச அழைப்புகள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல பலன்கள் கொண்ட இத்திட்டம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.3க்கும் குறைவாக செலவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மலிவு விலையில் நீண்ட கால வேலிடிட்டியுடன் கூடிய புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.மேலும், இந்த மலிவு திட்டத்தில் பயனர்கள் தங்கள் சிம்மை கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு செயலில் வைத்திருக்க முடியும்.
முதல் 60 நாட்களுக்கு இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற இலவச அழைப்புகள் செய்யலாம். முதல் 60 நாட்களுக்குப் பிறகு, மீதமுள்ள 300 நாட்களுக்கு பயனர்கள் வெளியிலிருந்து வரும் அழைப்புகளைப் பெறலாம். ஆனால் அழைப்புகளை மேற்கொள்ள இயலாது. அதன்பிறகு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு தனி ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
அந்த வகையில், பிஎஸ்என்எல்-ஐ, இரண்டாம் சிம்மாக பயன்படுத்துபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இதற்கிடையில், பிஎஸ்என்எல், தனது 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த தயாராகி வருகிறது. நிறுவனம் ஏற்கனவே பல தொலைத்தொடர்பு வட்டங்களில் 4G சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களையும் சேர்ப்பதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளது. தொலைத்தொடர்புத் துறை (DoT) பிஎஸ்என்எல் – இன் 5G நெட்வொர்க்கை சோதிக்கத் தொடங்கியுள்ளது. இது இணைப்புகளை மேம்படுத்துவதற்கும் பயனர்களுக்கு வேகமான சேவைகளை வழங்குவதற்கும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதிய திட்டத்தை இறக்கிய ஏர்டெல் டிஜிட்டல் டி.வி: அமேசான் ப்ரைம் பலன்களை பாருங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com