ஓடியாங்க.. ஓடியாங்க.. ஒ.டி.டி.யில் வெளியானது எல்.ஐ.கே!

LIK: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் எல்.ஐ.கே. இந்தப் படம் தற்போது ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.

Published on: May 6, 2026 at 5:06 pm

சென்னை, மே 6, 2026: பிரதீப் ரங்கநாதன் நடித்த “எல்ஐகே” (Love Insurance Kompany) திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஒ.டி.டி. தளத்தில் மே 6, 2026 முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

எல்ஐகே 2040ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சை-ஃபை காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில், ஒரு ஆப் மனிதர்களின் காதல் வாழ்க்கையை கண்காணித்து, உறவுகள் நீடிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.

இப்படத்தில், கதாநாயகன் வாசுதேவன், இயற்கையான காதலை நம்பும் ஒருவராக, இந்த டிஜிட்டல் உலகத்துக்கு எதிராக போராடுகிறார். இந்தக் கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார். இந்தப் படம் ஏப்ரல் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் சுமார் ₹60.23 கோடி வசூல் செய்தது. விமர்சகர்களிடமிருந்து கலவையான மதிப்பீடுகள் கிடைத்தன; ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 7ஆம் நூற்றாண்டு காவியம்.. ரூ.100 கோடி பட்ஜெட்.. மர்மயோகி என்னாச்சு? திரிஷா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com