கல்லூரி பேராசிரியர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயற்சி.. பரபரப்பு

Tirunelveli: திருநெல்வேலியில் கல்லூரி பேராசிரியர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க நடந்த முயற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Published on: May 6, 2026 at 3:07 pm

திருநெல்வேலி, மே 6, 2026: தமிழ்நாட்டில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கல்லூரி பேராசிரியரின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, சிலர் பணம் பறித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கல்வி உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியரின் புகைப்படத்தை சிலர் டிஜிட்டல் முறையில் மாற்றி ஆபாசமாக சித்தரித்துள்ளனர்.

பின்னர், அந்த படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பணத்தை கேட்டு பறித்துள்ளனர். பேராசிரியர், இதனால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்டதும், காவல்துறை சைபர் குற்றப்பிரிவு மூலம் விசாரணை தொடங்கியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய மொபைல் மற்றும் லேப்டாப் தரவுகள் ஆய்வு செய்யப்படுகிறது.

போலீசார் இது குறித்து இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மர்ம கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர். கல்லூரி பேராசிரியர் ரூ.60 ஆயிரம் வரை இழந்துள்ளார்.

இதையும் படிங்க : தி.மு.க.வுடன் கூட்டணி முறிவு; தமிழக வெற்றிக் கழகம்- காங்கிரஸ் கூட்டணி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com