திராவிடக் கட்சிகளிடம் இப்போதும் 120 இடங்கள் உள்ளன.. அ.தி.மு.க. பாண்டியராஜன்!

Pandiarajan: திராவிடக் கட்சிகளிடம் இப்போதும் 120க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன என அ.தி.மு.க. மு்ன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Published on: May 5, 2026 at 8:21 pm

சென்னை, மே 5, 2026: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் சென்னையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் இப்போதும் இரு திராவிடக் கட்சிகளிடம் 120க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ளன“ என்றார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய பாண்டியராஜன், “இரண்டு திராவிடக் கட்சிகளும் (அதிமுக மற்றும் திமுக) இணைந்து இப்போதும் 120-க்கும் மேற்பட்ட இடங்களைத் தங்கள் வசம் வைத்துள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. திராவிடக் கட்சிகள் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை” என்றார்.

மேலும், “திமுக ஆட்சிக்க எதிரான எதிர்ப்பு அலை இருந்தது; அதன் பலன் தமிழக வெற்றிக் கழகத்திடம் சென்றுள்ளது” எனக் கூறிய பாண்டியராஜன், விஜயால் இளைஞர்களின் மொழியில் பேச முடியும் எனவும் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல்

(நன்றி: ஏ.என்.ஐ)

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக மிக விரைவிலேயே மீண்டும் வலுவாக மீண்டு வரும் என்று நான் கருதுகிறேன். இன்னும் 6 மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில், நீங்கள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்“ எனவும் குறிப்பிட்டார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின்.. உணர்ச்சி ததும்ப காணப்பட்ட சேகர்பாபு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com