தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ இளைஞர்கள் காரணம்.. சித்த ராமையா

Siddaramaiah on Tamil Nadu Polls : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ இளைஞர்கள்தான் காரணம் என கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்த ராமையா தெரிவித்துள்ளார்.

Published on: May 5, 2026 at 3:35 pm

பெங்களூரு, மே 5, 2026: தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. ஆட்சியை இழந்துள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தோல்விக்கு இளைஞர்தான் காரணம் என கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்த ராமையா தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி தோல்வி ஏன்?

கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தோல்விக்கு என்ன காரணம் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த சித்த ராமையா, “15 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக மம்தா பானர்ஜி இருந்தார். இதனால் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். மேலும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக 91 லட்சம் வாக்குகள் வரை நீக்கப்பட்டன. இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம்” என்றார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்

தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சித்த ராமையா, “தமிழக வெற்றிக் கழக நிறுவனர் விஜய்க்கு இளைஞர்களின் வாக்கு பெருமளவு கிடைத்துள்ளது; இதுதான் ஆட்சி மாற்றம் நிகழ காரணம்” என்றார்.
மேலும், கேரளத்தில் காங்கிரஸ் எதிர்பார்ப்புகளை கடந்து வெற்றிப் பெற்றுள்ளது“ எனவும் சித்த ராமையா கூறினார்.

இதையும் படிங்க : விஜய்க்கு ஆதரவு அளிப்பீர்களா? தொல். திருமாவளவன் பதில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com