DMart Q4 net revenue : டிமார்ட் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன; நிறுவனத்தின் வருவாய் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
DMart Q4 net revenue : டிமார்ட் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன; நிறுவனத்தின் வருவாய் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.

Published on: May 3, 2026 at 10:10 am
சென்னை, மே 3, 2026: பிரபல டிமார்ட் நிறுவனம் FY26 நிதியாண்டின் மார்ச் காலாண்டு (Q4) முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, Q4-இல் ₹657 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை நிறுவனம் பெற்றுள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த ₹551 கோடி லாபத்தை விட 19.2% அதிகரிப்பு ஆகும். எனினும், சந்தை மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்பட்ட ₹806 கோடி லாபத்தை விட குறைவாகவே காணப்படுகிறது.
அதாவது, Q3 டிசம்பர் காலாண்டு ஒப்பிடுகையில், 23.3% நிகர லாபம் குறைந்தது காணப்படுகிறது. மேலும், 2.3% வருவாய் குறைந்துள்ளது.
சுருங்கச் சொல்வதென்றால், வருடாந்திர வளர்ச்சி இருந்தாலும், தொடர்ச்சியான காலாண்டு செயல்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும், Q4-இல் ₹17,684 கோடி ஒருங்கிணைந்த வருவாய் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த ₹14,872 கோடி வருவாயை விட 19% அதிகரிப்பு ஆகும். மேலும், சந்தை மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்பட்ட ₹16,412 கோடி வருவாயை விட அதிகமாக இருந்தது.
இதில், குறிப்பாக மார்ச் மாதத்தில் அதிகமான வாங்குதல் காரணமாக வருவாய் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5 கிலோ சிலிண்டர் வரலாறு காணாத விலை உயர்வு.. 48 சதவீதம் அதிகரிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com