Food | சுவையான கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Food | சுவையான கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: September 18, 2024 at 12:22 pm
Food | பொதுவாக உணவில் கத்தரிக்காயை சேர்த்துக்கொள்ள பலரும் அஞ்சுகின்றனர். ஆனால், நாம் பார்க்கப்போகும் இந்த கத்தரிக்காய் தொக்கு நமது உடலுக்கு மிகவும் சத்தானது. மேலும் இதை செய்வதும் எளிதானது. முதலில் தேவையான பொருள்களை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 4 பல்லு
மிளகாய் – 3
பெரிய வெங்காயம்- 2
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
தக்காளி – 3
கத்தரிக்காய் – கால் கிலோ
கொத்தமல்லி – இலை ஒரு கைப்பிடி அளவு
புளி – சிறிய துண்டு
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் பூண்டு, மிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் உப்பு சேர்த்து வதக்கும் பொழுது வெங்காயம் சீக்கிரம் வதங்கி வரும். பின்னர் இதனுடன் தக்காளி மற்றும் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இந்த கலவை நன்கு வதங்கியதும் இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இதனுடன் ஒரு சிறிய துண்டு புளி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் அரை டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை இரண்டு நிமிடத்திற்கு நன்கு வதக்க வேண்டும். இந்தக் கலவை நன்கு மசிந்து வெந்தவுடன் அடுப்புத் தீயை அனைத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவைக்க வேண்டும்.
இவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பேஸ்ட் போல் அரைக்காமல் மிதமாக கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளிப்பு பொரிந்து வந்ததும் இதனுடன் அரைத்து வைத்த விழுதினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்புத் தீயை லோ பிளேமில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து பரிமாறும். இப்போது சுவையான கத்தரிக்காய் தொக்கு ரெடி. இதை இட்லி, தோசை, சாதத்துடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க: ஒரு கப் முருங்கை கீரை; ஐந்து சின்ன வெங்காயம்: ஹெல்த்தி துவையல் ரெடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com