புதிய திட்டத்தை இறக்கிய ஏர்டெல் டிஜிட்டல் டி.வி: அமேசான் ப்ரைம் பலன்களை பாருங்க!

Airtel Digital TV | Amazon Prime | புதிய ஏர்டெல் திட்டங்கள் 350க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்கள் மற்றும் பிரத்யேக பிரைம் வீடியோ உள்ளடக்கத்தை ரூ.521 முதல் வழங்குகின்றன.

Published on: September 18, 2024 at 11:33 am

Airtel Digital TV | Amazon Prime |ஏர்டெல் டிஜிட்டல் டிவி, அமேசான் பிரைமுடன் இணைந்து “அல்டிமேட் மற்றும் அமேசான் ப்ரைம் லைட்” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய சலுகை, சந்தாதாரர்களுக்கு 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கனை வழங்குகிறது. மேலும், இரண்டு சாதனங்களில் HD இல் பிரைம் வீடியோ கிடைக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. பிரைம் லைட் சந்தாவில் மில்லியன் கணக்கான தயாரிப்புகளுக்கான வரம்பற்ற ஒரே நாள் மற்றும் அடுத்த நாள் டெலிவரி, மின்னல் ஒப்பந்தங்களுக்கு முன்கூட்டிய அணுகல், மற்றும் அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் 5 சதவீத கேஷ்பேக் போன்ற பலவகையான சலுகைகளை வழங்குகிறது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி, இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை இந்தி அல்டிமேட் மற்றும் அமேசான் பிரைம் லைட் ஆகும். இந்த திட்டங்களின் 30 நாள் திட்டத்திற்கான விலை ரூ. 521 மற்றும் 6 மாத திட்டத்திற்கான விலை ரூ.2,288 ஆகும். இந்தச் சலுகை, பிரைம் வீடியோவில் உள்ள ஓடிடி கன்டென்டுடன், 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் ஆப்ஷனை வழங்குவதன் மூலம் வீட்டு பொழுதுபோக்கை புதுமையாக மாற்ற விரும்புவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

மேலும், அமேசான் பிரைமுடனான கூட்டாண்மை, எங்கள் உள்ளடக்க வரிசையை மேம்படுத்துகிறது, இது வீட்டு பொழுதுபோக்கிற்கு சேவை செய்யும் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தி கன்டென்டுக்கு ரூ.521 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல் டிஜிட்டல் டிவியுடன் இணைந்து, பிரைம் வீடியோவின் முழு கன்டென்டையும் எளிதாக பெற முடியும். அதோடு, பிரைம் லைட்டின் மற்ற சலுகைகள், இலவச ஒரே நாள் மற்றும் அடுத்த நாள் டெலிவரி உள்ளிட்ட பலவகை நன்மைகளை வழங்குகிறது.

மிர்சாபூர் மற்றும் தி ஃபேமிலி மேன் போன்ற பிரபலமான பிரைம் வீடியோ தொடர்களுடன், தி பாய்ஸ் மற்றும் தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் போன்ற சர்வதேச ஹிட்சும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதனால், ஒரு மேம்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீபாவளி அதிரடி ஆஃபர்: ரிலையன்ஸ் ஜியோஃபைபர் ஓராண்டு இலவசம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com