பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த ‘மெட்ராஸ் எப்ஸ்டின்’ தமிழ் இசையமைப்பாளர்?

Swagatha S. Krishnan: ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன் தனது குற்றச்சாட்டுகளில் இசையமைப்பாளரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை.

Published on: April 30, 2026 at 10:21 am

சென்னை, ஏப்.30, 2026; பாடகி ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன், தமிழ் இசைத்துறையில் பிரபலமான இசையமைப்பாளர் ஒருவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறிய விவரங்கள் தற்போது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டில் இசையமைப்பாளரின் ஸ்டூடியோ – சவுண்ட் ப்ரூஃப், பூட்டப்பட்ட அறை, மறைமுக சி.சி.டி.வி கேமராக்கள் முக்கிய அம்சங்களாக உள்ளன.

பாலியல் துஷ்பிரயோகம், மறைமுகமாக வீடியோ பதிவு, பின்னர் அந்த பதிவுகளை மிரட்டலுக்குப் பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றங்களும் வெளிவந்துள்ளன. அதாவது, முதலில் “மென்டார்” போல நம்பிக்கை பெறுதல், பின்னர் உணர்ச்சி மற்றும் நிதி சார்ந்த சார்பை உருவாக்கி, அதனைச் சுரண்டல் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை பாடகி ஸ்வாகதா, “மெட்ராஸ் எப்ஸ்டீன்” என விவரித்துள்ளார். தொடர்ந்து, ஸ்வாகதா, கடுமையான மன அழுத்தம், தனிமைப்படுத்தல், சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் தேவைப்பட்டதாக கூறியுள்ளார். இது மட்டுமின்றி, இசைத்துறையில் அவதூறு, திருட்டு குற்றச்சாட்டு, குடும்ப உறுப்பினர்களின் அவமதிப்பு ஆகியவற்றால் அவர் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து, வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாகவும், தற்போது சட்டரீதியான புகார் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஸ்வாகதா தெரிவித்துள்ளார். எனினும், குற்றஞ்சாட்டப்பட்ட இசையமைப்பாளர் பெயரை அவர் வெளிப்படையாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படும்.. பார்த்திபன் வழக்கை முடித்து வைத்து நீதிபதி கருத்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com