Thol Thirumavalavan : தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையும் என நான் எப்போதும் சொல்லவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thol Thirumavalavan : தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையும் என நான் எப்போதும் சொல்லவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Published on: April 28, 2026 at 2:44 pm
சென்னை, ஏப்.28, 2026: தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையும் என தாம் கூறவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார் வி.சி.க நிறுவனர்-தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், “தமிழக தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவு தான் நடந்துள்ளது என போதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு எஸ்.ஐ.ஆர் தீவிர திருத்தம் மூலம் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டதால், வாக்குப்பதிவு அதிகரித்தது போல தோற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இது உண்மை அல்ல; ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் சுமார் 20 முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்வது வழக்கம். அவர்கள் போட்ட வாக்குகள்தான் கூடுதலாகி உள்ளன. இந்தத் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நம்பிக்கை தெரிவிக்கிறது.
தொங்கு சட்டமன்றம் விளக்கம்
தொங்கு சட்டமன்றம் அமையும் என எப்போதும் கூறவில்லை; தேர்தலுக்குப் பிறகு, விஜய் பெற்ற வாக்கு சதவீதத்தைப் பொறுத்து தமிழக அரசியல் சூழல் மாறும் என மட்டுமே கூறினேன்“ என்றார்.
இதையும் படிங்க : மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை.. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com