James Vasanthan: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது.
James Vasanthan: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது.

Published on: April 28, 2026 at 12:26 pm
சென்னை, ஏப்.28, 2026: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து திருவான்மியூர் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் அரசியல் தொடர்பு இல்லை. ஜேம்ஸ் வசந்தன், உணவகம் அருகிலுள்ள ஒரு வீட்டின் வாசலில் தனது காரை நிறுத்தியிருந்தார். அந்த வீட்டின் உரிமையாளர், வீட்டுக்குள் செல்ல முடியாத சூழலில், காரை அங்கு நிறுத்தியதால் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில், அந்த வீட்டின் பெண் ஒருவர், வீட்டுக்குள் செல்ல முடியாததால், ஜேம்ஸ் வசந்தனின் காரின் கண்ணாடியை உடைத்தது அம்பலமாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர். அதாவது, இந்தச் சம்பவம் அரசியல் காரணமாக அல்லாமல், தனிப்பட்ட இடையூறு காரணமாக நடந்தது என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
புகார் என்ன?
ஜேம்ஸ் வசந்தன் தனது கார் கண்ணாடியை விஜய் கட்சியினர் உடைத்துவிட்டனர் என பொருத்தமில்லாத வார்த்தையை பயன்படுத்தி மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், இந்த விமர்சனம் அவருக்கே தற்போது எதிராக கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :காஜல் அகர்வால் நடிப்பில் தி இந்தியா ஸ்டோரி.. இந்தியாவே எதிர்பார்க்கும் கதை.. ரிலீஸ் எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com