உடல் நலம் முதல் மன அமைதி வரை.. உடலைச் செழுமைப்படுத்தும் யோகா.. பிரதமர் நரேந்திர மோடி!

International yoga day 2026 : உடல் நலம் முதல் மன அமைதி வரை யோகா ஒருவரின் உடலை செழுமைப்படுத்துகிறது என கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Published on: June 21, 2026 at 1:34 pm

கொல்கத்தா ஜூன் 21, 2026; கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். “உடல் நலம் முதல் மன அமைதி வரை, யோகா வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் செழுமைப்படுத்துகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

இந்த ஆண்டு யோகா தினம் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. வயது அதிகரிக்கும் போது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தக்கவைத்துக்கொள்ள யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்தளங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, யோகாவின் நன்மைகளை அனுபவித்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.

சர்வதேச யோகா தினம் 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஜூன் 21ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. யோகாவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்புவதற்காக இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னெடுப்பால் உலக நாடுகள் யோகாவை ஆரோக்கிய வாழ்வின் முக்கிய அங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

இதையும் படிங்க; இன்று சர்வதேச யோகா தினம்.. கருப்பொருள் – சிறப்பு என்ன?

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு! Modi Slams Opposition

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர்

ஞானேஷ் குமாரைக் காப்பாற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.. மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு Kharge Accuses Modi Government

ஞானேஷ் குமாரைக் காப்பாற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.. மல்லிகார்ஜுன கார்கே

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com