Jafferkhanpet Woman Assault Case : சென்னையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
Jafferkhanpet Woman Assault Case : சென்னையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

Published on: April 28, 2026 at 12:47 pm
சென்னை, ஏப்.28, 2026: சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் வசிக்கும் 27 வயது இளம் பெண் ஒருவர், தனது அக்காவுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 25-ம் தேதி இரவு, அக்கா உறவினரைப் பார்க்க வெளியே சென்றிருந்த நிலையில், அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, வீட்டு உரிமையாளரின் மகன் அனந்த கிருஷ்ணன் (41) அனுமதி இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் கூச்சலிட முயன்றபோது, அவர் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார்.
பின்னர் வீடு திரும்பிய அக்காவிடம் நடந்ததை கூறிய பெண், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அனந்த கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதாக தெரியவந்தது.
விசாரணை முடிவில், அனந்த கிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : தி.மு.க தொண்டர் காதறுப்பு.. விழுப்புரத்தில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com