இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

Free Trade Agreement : இந்தியா மற்றும் நியூசிலாந்து, இன்று பிற்பகல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டன.

Published on: April 27, 2026 at 6:01 pm

புதுடெல்லி, ஏப். 27 2026: இந்தியா மற்றும் நியூசிலாந்து, இன்று புதுடெல்லியில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டன. மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவின் அனைத்து ஏற்றுமதி பொருட்களுக்கும் 100% சுங்கவரி விலக்கு வழங்குகிறது. இதன் மூலம் சேவைகள், கல்வி, சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், முதலீடு போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

நியூசிலாந்து, 20 பில்லியன் டாலர் நீண்டகால முதலீட்டு உறுதிமொழி மூலம் இந்தியாவின் தொழில் வளர்ச்சி, புதுமை, அடிப்படை வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஆதரிக்கிறது. அதேசமயம், இந்தியா தனது முக்கிய துறைகள் — பால், வேளாண்மை, வைரம் மற்றும் நகை — ஆகியவற்றை பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் காப்பாற்றியுள்ளது.

இந்தியா–நியூசிலாந்து வணிக மாநாட்டில் பியூஷ் கோயல், “இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் அடித்தளமாகும்” என்று கூறினார்.

அவர், இந்தியாவின் பெரிய சந்தை, திறமையான மனிதவளம், டிஜிட்டல் திறன்கள், உற்பத்தி வலிமைகள் ஆகியவை, நியூசிலாந்தின் வேளாண் தொழில்நுட்பம், தூய்மையான ஆற்றல், பின்டெக் நிபுணத்துவத்துடன் இணைந்து, விவசாயிகள், தொழில்முனைவோர், மாணவர்கள், பெண்கள், புதுமையாளர்கள் அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எள்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஒப்பந்தம் நவீன விவசாய உற்பத்தித்திறனை ஊக்குவித்து, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட திசைசார் ஏற்றுமதிகள் மூலம் இப்பகுதியில் உள்ள இந்திய வணிகங்களுக்குக் கதவுகளைத் திறந்து, இளைஞர்களுக்கு உலக அரங்கில் கற்கவும், பணியாற்றவும், வளரவும் வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க வங்கித் துறையில் ஏ.ஐ அபாயங்கள்.. நிர்மலா சீதாராமன் ஆலோசனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com