IDFC First Bank: ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் 10 சதவீதம் உயர்வு கண்டள்ளன.
IDFC First Bank: ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் 10 சதவீதம் உயர்வு கண்டள்ளன.

Published on: July 27, 2026 at 1:21 pm
சென்னை, ஜூலை 27, 2026: ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை 2027 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டதைத் தொடர்ந்து வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தேசிய பங்குச் சந்தையில் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் சுமார் 10% உயர்ந்து ரூ. 88.76 என்ற அதிகபட்ச விலையை எட்டின. மறுபுறம், பேங்க் ஆஃப் பரோடா பங்குகள் பெரிய மாற்றமின்றி, 0.5% உயர்வுடன் ரூ. 247.70-ஐத் தொட்டன.
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கியின் முடிவுகள் நிலையான முன்னேற்றத்தைக் காட்டின. இந்த நிலையில், நுவமா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் என்ற நிறுவனம் பங்கிற்கான பரிந்துரையை ‘Hold’ என்பதிலிருந்து ‘Buy’ என உயர்த்தியது. இந்த நிலையில், இலக்கு விலை ரூ. 67.3-லிருந்து ரூ. 95-ஆக உயர்த்தப்பட்டது. வங்கியின் ஆர்.ஓ.ஏ 2026-ல் 0.4%-ஆக இருந்த நிலையில், 2027-ல் 1%-ஆகவும், 2028-29-ல் 1.2% முதல் 1.4% வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேங்க் ஆஃப் பரோடாவின் முடிவுகள் கலவையானதாக அமைந்தன. செலவை நீக்கிப் பார்த்தால், பேங்க் ஆஃப் பரோடாவின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 22% வளர்ந்திருக்கும். ஆர்.ஓ.ஏ 1.1%-ஆக இருந்திருக்கும். நிகர வட்டி வருவாய் 10% வளர்ந்தாலும், அது தரகு நிறுவனத்தின் மதிப்பீட்டிற்குக் குறைவாக இருந்தது. NIM 12 அடிப்படை புள்ளிகள் சரிந்தது. முக்கியக் கட்டண வருமானம் 22% சரிந்தது.
இருப்பினும், நிலையான சொத்து ஒதுக்கீடுகள் விடுவிக்கப்பட்டதால், ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு லாபத்தன்மைக்கு ஆதரவளித்தது. பேங்க் ஆஃப் பரோடா, என்.எம்.சி ஹெல்த் வழக்குத் தீர்வின் தாக்கத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, FY27 முதல் காலாண்டில் தனது நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு 72% சரிவைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தங்கத்தில் முதலீடு.. பொறுமை சாமி, பொறுமை.. 28 சதவீதம் சரிவு.. பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com