வங்கித் துறையில் ஏ.ஐ அபாயங்கள்.. நிர்மலா சீதாராமன் ஆலோசனை!

AI Threats to Banking : வங்கித் துறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அபாயங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

Published on: April 25, 2026 at 1:41 pm

புதுடெல்லி, ஏப்.25, 2026: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர், சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மாதிரிகளின் முன்னேற்றங்களுடன் தொடர்புடைய புதிய அச்சுறுத்தல்களின் தாக்கத்தை மதிப்பிட ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.

அப்போது, தொழில்நுட்பங்கள் மென்பொருள் பலவீனங்களை ஆயுதமாக்கும் வகையில் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய ஏ.ஐ மாதிரிகளால் உருவாகும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது எனக் குறிப்பிட்டார்.
மேலும், மிக உயர்ந்த அளவிலான எச்சரிக்கை, தயார்நிலை மற்றும் நிதி நிறுவனங்கள், வங்கிகள் இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான எந்தச் செயல்பாடுகளையோ அல்லது சைபர் சம்பவங்களையோ உடனடியாக இந்திய கணினி அவசர பதில் குழு (CERT-In) உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்றும், அனைத்து தொடர்புடைய அமைப்புகளுடனும் நெருங்கிய ஒருங்கிணைப்பை பேண வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க : பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து.. இந்திய ரிசர்வ் வங்கி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com