ரூ.112 கோடி நஷ்டஈடு கோரி நோட்டீஸ்.. விக்னேஷ் சிவனுக்கு அனுப்பிய எல்.ஐ.சி!

LIC notice to Vignesh Shivan : ரூ.112 கோடி நஷ்டஈடு கேட்டு, விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Published on: April 15, 2026 at 1:11 pm

சென்னை, ஏப்.15, 2026: நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரையில் வெளியான படம் எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). இந்தப் படத்துக்கு முதலில் லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் என்ற பெயரை அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், எல்.ஐ.சி நிறுவனம் நஷ்டஈடு கோரி ரூ.112 கோடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால் அதிர்ச்சியுற்ற விக்னேஷ் சிவன் படத்தின் பெயரை எல்.ஐ.கே, எல்.ஐ.எஃப், எல்.ஐ.பி., அல்லது எல்.ஐ.டி என மாற்றம் செய்துள்ளார். இறுதியில் எல்.ஐ.சி என்ற பெயரை ஓ.கே செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையில் வெளியானது. இந்தப் படத்தில், சீமான், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமமைத்துள்ளார்; இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மிருணால், பூஜா வருண் தவான் காம்பினேஷன்.. ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை வெளியீடு எப்போது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com