மும்பை, ஏப்.14, 2026: எல்.ஐ.சி நிறுவனம், 1:1 போனஸ் பங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்த, தேசிய காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி) தனது இயக்குநர் குழுவின் ஒப்புதலுடன் 1:1 போனஸ் பங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது.
இது 2022 மே மாதத்தில் பட்டியலிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக வழங்கப்படும் போனஸ் பங்கு ஆகும். அப்போது அரசு தனது பங்குகளில் 3.5% விற்று ரூ.21,003 கோடி திரட்டியது.
இந்த போனஸ் பங்கு வெளியீடு, அடுத்தடுத்த பொதுமக்கள் பங்கு வெளியீட்டுக்கான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்ட பரிமாற்ற அறிக்கையில், நிறுவனம் 2025 டிசம்பர் நிலவரப்படி ரூ.6,325 கோடி இருப்புகளை மூலதனமாக்கி போனஸ் பங்குகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி போனஸ் பங்கு வெளியீடு
1:1 போனஸ் பங்கு வெளியீடு என்பது, பதிவு தேதியில் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் கூடுதலாக ஒரு பங்கு இலவசமாக வழங்கப்படும் என்பதைக் குறிக்கிறது. இதனால் ஒவ்வொரு பங்கின் மதிப்பு பாதியாகும்.
செய்தி வெளியான பின் கடந்த ஐந்து நாட்களில் எல்.ஐ.சி பங்குகள் 9.32% உயர்ந்தன. திங்கட்கிழமை பங்கு விலை ரூ.809-க்கு 1% உயர்ந்து முடிந்தது. போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பின் ஒவ்வொரு பங்கின் விலை ரூ.404.50 ஆகும்.
இந்த போனஸ் பங்கு வெளியீடு ஜூன் 12-க்குள் நிறைவு செய்யப்படும். பட்டியலிடப்பட்டதிலிருந்து எல்.ஐ.சி, ஐந்து இடைக்கால லாபப்பங்குகளை அறிவித்துள்ளது.
பொதுவாக நிறுவனங்கள் பங்குகளின் திரவத்தன்மையை அதிகரிக்க, பங்குகளை மலிவாகக் கிடைக்கச் செய்ய, மற்றும் எதிர்கால வளர்ச்சியில் நம்பிக்கை காட்டும் வகையில் போனஸ் பங்குகளை அறிவிக்கின்றன.
இதற்கிடையில், ஜனவரி முதல் பங்கு விலை 5% குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு ஆண்டில் 3% உயர்வை கண்டுள்ளது. எல்.ஐ.சி. 2024 டிசம்பர் காலாண்டில் ரூ.12,930 கோடி நிகர வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.11,008 கோடியில் இருந்து 17% அதிகரிப்பு ஆகும்.
நிகர காப்பீட்டு பிரீமியம் வருமானம் ரூ.1.26 லட்சம் கோடி, கடந்த ஆண்டு ரூ.1.07 லட்சம் கோடியில் இருந்து 17% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக உயர்வு.. ஆசிய வளர்ச்சி வங்கி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்