தஞ்சை பிரகதீஸ்வரர் சித்திரைத் திருவிழா.. திருக்கல்யாணம், முக்கிய நிகழ்வுகள்.. முழு விவரம்!

Chithirai festival : தஞ்சை பிரகதீஸ்சரர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

Published on: April 13, 2026 at 7:33 pm

Updated on: April 13, 2026 at 9:29 pm

தஞ்சாவூர், ஏப். 13 2026: தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை மாத பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் தொடக்கமாக காலையில் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பின்னர், வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை வழிபாடுகள் நடந்து, கோயில் த்வஜஸ்தம்பத்தில் (கொடிமரம்) புனிதக் கொடி ஏற்றப்பட்டது. இதன் மூலம் பல நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா முறையாக ஆரம்பமானது.

இந்த விழா காலத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை போன்றவை நடைபெறும். மேலும், உற்சவர் வீதி உலா, பல்வேறு வாகன சேவைகள், இசை மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக தேரோட்டம், திருக்கல்யாணம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. இதனால் தஞ்சாவூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

18-ம் நாளான 30-ந்தேதி தியாகராஜர் ருத்திரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம், தொடர்ந்து மதியம் நடராஜர் 4 ராஜவீதிகள் புறப்பாடு நடைபெறும். பின்னர் சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெறுகிறது.

இந்த சித்திரை திருவிழா, பக்தர்களின் ஆன்மிக உணர்வை உயர்த்தும் முக்கியமான திருவிழாவாக திகழ்கிறது.

இதையும் படிங்க : கொளத்தூரில் கமல்ஹாசன் பரப்புரை.. விஜயின் பெரம்பூர் டார்கெட்.. எப்போது தெரியுமா?

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு! Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com