Assembly Election 2026: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் செங்கோட்டையன் சின்னத்தை மாற்றி வாக்கு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Assembly Election 2026: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் செங்கோட்டையன் சின்னத்தை மாற்றி வாக்கு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published on: April 12, 2026 at 9:21 am
ஈரோடு, ஏப்.12, 2026: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் செங்கோட்டையன் சின்னத்தை மாற்றி வாக்கு கேட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி பரப்புரை செய்தார் செங்கோட்டையன். இதனால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் அருகே பரப்புரை செய்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது வாக்கு சேகரிப்பின் போது, விசிலுக்கு பதில் ‘இரட்டை இலை’ என்று செங்கோட்டையன் குறிப்பிட்டார்; இதனால் தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையும் அதிர்ச்சியும் ஒரு சேர ஏற்பட்டது.
பழக்க தோஷம்…
இந்நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்ட செங்கோட்டையன், “இரட்டை இலை என்று கேட்டு கேட்டு பழகிவிட்டேன்” என்று சமாளித்தார். இதனால் தமிழக வெற்றிக் கழக நர்வாகிகள்- தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.. தவெக தலைவர் விஜய்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com