எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து மக்கள் செல்வாக்கு கொண்டவர் விஜய்.. சதீஷ் கிறிஸ்டோபர்!

Satish Christopher : எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து மக்கள் செல்வாக்கு விஜய்க்கு இருக்கிறது என ராதாபுரம் தமிழக வெற்றிக் கழகத் வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

Published on: April 10, 2026 at 9:09 pm

Updated on: April 10, 2026 at 9:15 pm

திருநெல்வேலி, ஏப். 10 2026: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடுபவர் சதீஷ் கிறிஸ்டோபர். மருத்துவரான இவர், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் களம் காண்கிறார்.

இந்நிலையில், கன்னியாகுமரி பார்வதிபுரம் அருகே ஐ.ஏ.என்.எஸ் செய்தியாளருக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அடுத்து மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவர் விஜய்” எனக் கூறினார்.

சதீஸ் கிறிஸ்டோபர் பேட்டி

(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)

மேலும், “கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் கருத்தை கண்டித்த சதீஷ் கிறிஸ்டோபர், “2026ல் தளபதி (விஜய்) அறியணை ஏறுவார் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” எனவும் தெரிவித்தார்.

ஏப்ரல் 23 வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் அப்பாவு, பா.ஜ.க சார்பில் எஸ்.பி பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சார்பில் கிரிஜா தாமரை பாண்டியன் ஆகியோர் களத்தில் உள்ள பிரதான வேட்பாளர்கள் ஆகும்.

இதையும் படிங்க: விஜய் களமிறங்கும் பெரம்பூரில் 47 பேர் போட்டி.. தலைநகரில் இங்குதான் அதிகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com