விஜய் சொன்னதில் என்ன தவறு? ஜி.கே. வாசன்!

Assembly Election 2026 : உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் என விஜய் சொன்னதில் என்ன தவறு எனக் கேள்வியெழுப்பியுள்ளார் ஜி.கே வாசன்.

Published on: April 10, 2026 at 7:36 pm

கன்னியாகுமரி, ஏப்.10: கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் வாக்கு சேகரில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, ஐ.ஏ.என்.எஸ் செய்தியாளரை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், “உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் என விஜய் பேசியதில் என்ன தவறு? எனக் கேள்வியெழுப்பினார்.

ஜி.கே. வாசன் பேட்டி.

(நன்றி. ஐ.ஏ.என்.எஸ்)

தொடர்ந்து பேசிய அவர், “தி.மு.க. கூட்டணி கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் தானே பேசினார்கள்? தமிழக வெற்றிக் கழகத்தோடு, காங்கிரஸ் கூட்டணி சேர வேண்டும் என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பேட்டி கொடுத்தார்கள்.

டெல்லிக்கு சென்றும் வாதாடி, போராடி பார்த்தார்கள். இவ்வாறு நிலைமையை புரிந்துக் கொண்டுதானே விஜய் பேசுகிறார். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மனநிலைக்கு மாறாகதானே இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தோடு இருப்பது உண்மைதானே? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க: திமுக 200+ தொகுதிகளில் வெல்லும்.. மு.க ஸ்டாலின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com