Kharif 2026 : 2026-ஆம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
Kharif 2026 : 2026-ஆம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Published on: April 8, 2026 at 6:17 pm
புதுடெல்லி, ஏப். 8 2026: கரீஃப் 2026 பருவத்திற்கான பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கு Nutrient-Based Subsidy (NBS) மானிய விகிதங்களை மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மலிவான மற்றும் நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், கரீஃப் பருவம் 2026க்கான இந்த மானிய திட்டத்திற்கு சுமார் ரூ.41,533 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.
விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கை
உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், தேவையான அளவில் உரங்கள் கிடைக்கவும் இந்த மானியம் உதவும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த முடிவு, விவசாயிகளுக்கு மானிய விலையில், கட்டுப்படியாகக்கூடிய மற்றும் நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
ஜெய்ப்பூர் மெட்ரோ கட்டம்-2 திட்டத்துக்கு ஒப்புதல்
இதற்கிடையில், 41 கிலோமீட்டர் நீளமுடைய ஜெய்ப்பூர் மெட்ரோ கட்டம்-2 திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ப்ரஹ்லாத்புரா (Prahladpura) முதல் டோடி மோட் (Todi Mod) வரை செல்லும் இந்த மெட்ரோ வழித்தடத்தில் மொத்தம் 36 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.13,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட உள்ளது.
இந்த திட்டத்தை ராஜஸ்தான் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இது இந்திய அரசும் ராஜஸ்தான் அரசும் இணைந்து அமைத்த 50:50 கூட்டு நிறுவனம் ஆகும்.
முக்கிய பகுதிகளுக்கு இணைப்பு
மெட்ரோ கட்டம்-2 வழித்தடம் சிடாபுரா தொழிற்பேட்டை , VKIA, ஜெய்ப்பூர் விமான நிலையம், டோங்க் சாலை, SMS மருத்துவமனை மற்றும் மைதானம், அம்பாபாரி , வித்யாதர் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம்.. திடீர் நடவடிக்கையால் பரபரப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com