Rajinikanth : ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க மறுத்தார்.
Rajinikanth : ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க மறுத்தார்.

Published on: April 8, 2026 at 4:59 pm
Updated on: April 8, 2026 at 5:57 pm
சென்னை, ஏப் 8 2026: விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் உள்ளிட்ட பிரச்சணைகளால் வெளியீடு தாமதமாகி வருகிறது. இதுகுறித்து எழுந்துள்ள விவாதங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
சர்ச்சை குறித்து பேச மறுத்த ரஜினிகாந்த்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் ‘ஜனநாயகன்’ படம் குறித்த சர்ச்சை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சாரி.. கருத்து கூற விரும்பவில்லை என சுருக்கமாக பதிலளித்தார்.
கஞ்சா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள்
நடிகர்கள் பின்னால் சென்று நிறைய இளைஞர்கள் அடிபட்டு செல்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் படிக்கும் நேரத்தில் படிப்பில் தான் முழு கவனமும் இருக்க வேண்டும். அந்த நேரத்தை விட்டு விட்டால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். படிப்பில் மட்டுமே சிந்தனை இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். .
கஞ்சா குடிப்பழக்கம் போன்றவற்றிற்கு அடிமையாகாதீர்கள். இல்லையென்றால் உங்கள் வாழ்க்கையே கெட்டுப் போய்விடும் உங்கள் குடும்பத்தின் வாழ்க்கையை நரகம் ஆகிவிடும். அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தாலும் அவர்களுடன் செல்லாதீர்கள் தள்ளி இருங்கள் என்றார்.
இதையும் படிங்க: நிம்மதி பெருமூச்சு.. பிரபல வழக்கில் கௌதம் வாசுதேவ் மேனன் விடுவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com