Gautham Menon Cleared of Tax Case: சென்னை உயர்நீதிமன்றம், திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான ற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளது.
Gautham Menon Cleared of Tax Case: சென்னை உயர்நீதிமன்றம், திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான ற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளது.

Published on: April 8, 2026 at 2:31 pm
சென்னை, ஏப்.8, 2026: சென்னை உயர்நீதிமன்றம், திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக, பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாத வழக்கில் தொடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளது.
நீதிபதி ஜி. கே. இலந்திரையன், இயக்குநர் தாக்கல் செய்த மனுவை ஏற்று, திங்கள்கிழமை இந்த உத்தரவை வழங்கினார். வருமான வரித்துறை, 2013–14 மதிப்பீட்டு ஆண்டிற்கான அறிக்கையை தாக்கல் செய்யாததற்காக மேனனை மூன்றாவது குற்றவாளியாக இணைத்திருந்தது. இந்நிலையில், மனுதாரரின் சார்பில் வாதித்த வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன், மேனன் 2011 மே 2 அன்று இயக்குநர் பதவியில் இருந்து விலகியதாகவும், அதற்கான ஆவணங்கள் நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவர் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிர்வாகத்தில் எந்த பங்கும் இல்லையென வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இலந்திரையன், குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் மேனன் இயக்குநராக இல்லாததால், தினசரி நிர்வாகத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: என் ரசிகர்கள் என சொல்ல நான் ஏன் கூச்சப்படணும்? பிரதீப் ரங்கநாதன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com