மக்களை ஏமாற்றும் மன்னராட்சி.. தி.மு.க.வை விமர்சித்த சசிகலா

Assembly Election 2026 : மக்களை ஏமாற்றும் மன்னராட்சி அகற்றப்பட வேண்டும் என சசிகலா விமர்சித்துள்ளார்.

Published on: April 8, 2026 at 11:43 am

திருப்பரன்குன்றம், ஏப்.8, 2026: தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் மன்னராட்சி அகற்றப்பட வேண்டும் என தி.மு.க.வை விமர்சித்துள்ளார் சசிகலா. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அஇபுதமமுக என்ற கட்சியை நடத்திவருகிறார்.
இந்தக் கட்சி சார்பாக திருப்பரன்குன்றம் சட்டமன்ற தேர்தலில் தனபாண்டியன் என்பவர் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) திருப்பரன்குன்றத்தில் சசிகலா வாக்கு சேகரித்தார். அப்போது, “திருப்பரன்குன்றம் மலை தீப விவகாரம் குறித்தும் பேசினார். இது குறித்து பேசிய சசிகலா, “ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் உள்ள சிக்கல்களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து, “மக்களை ஏமாற்றும் மன்னராட்சியை அகற்றி உண்மையான மக்களாட்சியை கொண்டு வர வேண்டும்” எனவும் தி.மு.க.வை விமர்சித்தார்.

வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் ஏப்.23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இதையும் படிங்க: எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி.. மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா பரபரப்பு பேச்சு

எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி.. மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா பரபரப்பு பேச்சு Assembly Election 2026

எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி.. மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா பரபரப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com